பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

28

கொழுந்து இலைகள் தெரிந்தன. பிறகு மெல்லிய தண்டு நேராக எழுந்தது. இலை குலுங்க வளர்ந்து, முன்பு இருந்ததைப் போல அவர்கள் எதிரே அது அதே அளவுச் செடி யாகி நின்றது!

தட்சகன் இதை ரசித்துப் பார்த்தான். ஆயினும் அவனுக்கு இது ஒன்றும் பெரிய விந்தையாகத் தோன்றவில்லை. இதைப்போல் பல விந்தைகளேயும் அற்புதங்களையும் நிகழ்த் தும் சித்தர்களே அவன் பார்த்திருக்கிறான்.

'இந்த வித்தையில் உன் திறமையைப் பாராட்டுகிறேன். ஆனால் பரீட்சித்து மன்னன் விஷயத்தில் மட்டும் எனக்கு எதிராக ஒன்றும் செய்யாதே என்று காசியபரிடம் கேட்டுக் கொண்டான்.

ஏன்?'’ என்று காசியபர் விசாரித்தார்.

முதலில் இதற்கு பதில் சொல். விதியை எதிர்ப்பது நமக்குச் சரியா? .

இல்லை” என்றார் காசியபர் உடனே. ஆனால் பரீட்சித்து விதியை முடிக்க ஒரு சாபம்தானே வந்திருக்கிறது?”

நீ நினைப்பது தப்பு” என்றான். அரசன் அற்பாயுளில் இறந்துபோவதற்காக என்னை யாரும் இங்கே அனுப்பவில்லை.