பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

உபமன்யு கற்ற பாடம்

     வெகு காலத்திற்கு முன்பு அயோத்தியில் தெளம்யர் என்று ஒரு குரு இருந்தார். அவரது குருகுலத்தில் பல மாணவர்கள் கல்வி கற்றனர். அவர்களில் ஒருவன் உபமன்யு. உபமன்யு வும் மற்ற மாணவர்களும் தங்கள் குருவுடன் கிராமத்தின் எல்லையிலிருந்த ஆசிரமத்தில் வாழ்ந்துவந்தனர்.
     குருகுலத்தின் கட்டுப்பாடுகள் கடுமையானவை. அவற்றுள் முக்கியமானது பணிந்து நடப்பது. ஆசிரியர் என்ன சொன்னாலும் மறு பேச்சின்றிக் கேட்டாக வேண்டும். குரு குலத்தின் மற்றொரு பழக்கம் என்ன தெரியுமா? கிராமத்தார் மாணவர்களுக்கு உணவு அளிப்பார்கள்; மாணவர்கள் கொண்டுவரும் உணவை மாணவர்களும் ஆசிரியர்களும் பகிர்ந்து கொள்வார்கள்.

ஆசிரமத்தில் எல்லாருக்கும் தேவையான பழமரங்கள் இருந்தன. பாலுக்கும் மோருக்கும் பசுக்கள் இருந்தன. மாணவர்கள் அங்கே கற்றுக்கொண்டவை தர்மசாஸ்திரமும் போர் வித்தையும். பிற்காலத்தில் திருமணம், அந்திமக்கிரியை, யாகம் போன்ற சடங்குகளைச் செய்வதற்கு விரும்பியவர்கள் வேதங்களையும் உபநிடதங்களையும் கற்றர்கள்.