பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 ஆசிரமத்தின் குரு, வெறும் பாடம் சொல்லிக்கொடுப்பவராக மட்டும் இருக்கவில்லை. எல்லா மாணவர்களுக்கும் தந்தையும் தாயுமாக இருந்து கவனித்துக்கொண்டார். எல்லாருமே வயதில் சிறியவர்கள். பெற்றோர்கள் அந்தக் குழந்தைகளை அவரது பொறுப்பில் விட்டிருந்தனர். மாணவர்களின் அறிவு வளர்ச்சியில் அக்கறை காட்டியது போல அவர்கள் ஆரோக்கியமாக வளரும்படியும் அவரே பார்த்துக்கொண்டார். அவர்களிடம் நல்ல பழக்கம் படியும்படி பார்த்துக்கொண்டார். மனத்தில் நல்ல எண்ணங்களே நிலவும்படி பழக்கப்படுத்தினார். நல்ல குணசாலிகளாக விளங்கச் செய்தார். எல்லாரும் கட்டுப்பாடு நிரம்பியிருக்கும்படி பார்த்துக்கொண்டார்.

    மாணவர் எவருக்கேனும் நோய் நொடி வந்தால் பரிவுடன் கவனித்துவருவார். யாரேனும் தவறுசெய்தால் தண்டனையும் அளிப்பார். அவன் அரசகுமாரனானாலும் சரி. பெற்றோர் அனைவருமே குருவிடம் மரியாதை காட்டினர்கள்.
    ஒரு நாள் குரு தெளம்யர் உபமன்யுவை அழைத்தார். "உப்மன்யு பெரிய யாகம் நடத்தும் அரசனுடன் நீ சில நாள் இருக்கவேண்டும். இது என் ஆசை. அரசனுக்குத் தேவையான உதவிகளைச் செய்துவா. அப்படியே, யாகம் நடத்தவும் வேதியர்களிடமிருந்து கற்றுக்கொள்" என்றார், உடமன்யு உற்சாகத்துடன் புறப்பட்டு, அரசனின் அந்தரங்க உதவியாளன் ஆனான் கல கலப்பாகப் பழகி, கடினமாக உழைக்கும் உபமன்யுவை எல்லாருக்கும் பிடித்திருந்தது.