பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35

கொண்டு, தலை அசைத்து, அவனே அனுப்பிவிட்டார். உப மன்யு நாள் முழுவதும் காத்திருந்தான். யாரும் அவனுக்கு உணவளிக்கவில்லே. பசியுடன் படுக்கச் சென்றான்.

இரண்டு நாட்களுக்குப் பிறகு மறுபடியும் தெளம்யர் இவனே அழைத்தார். உபமன்யு பசியால் வாடி, கண் இடுங்கி இருப்பான் என்று நினைத்தார். ஆனால் எப்போதும்போல் உப மன்யு உற்சாகத்துடனும், பொலிவுடனும் வருவதைக் கண்ட ஆசிரியர் வியந்தார்.

தெளம்யருக்கு ஒன்றும் புரியவில்லை வில் லே . 'உபமன்யு, இரண்டு நாளாக நீ கொண்டுவரும் ஆகாரத்தை எல்லாம் நானே எடுத்துக்கொண்டு விடுகிறேன். உனக்கு ஒன்றும் மிச்சம் வைப்பதில்லை. நீ பசியால் மயங்கிக் கிடப்பாய் என்று நினைத்தால், நீ சோர்வில்லாமல் இருக்கிறாயே. எப்படி? என்று விசாரித்தார்.

' குருவே, நான் தினம் இரண்டாவது முறை கிராமத்தாரி டம் போய் எனக்கு வேண்டிய ஆகாரம் பெறுகிறேன்?? என்றான் சீடன். . -

அதிருப்தியுடன் குரு முகம் சுளித்தார். "என்ன? எத்தனே முறை சொல்லியிருக்கிறேன், மறந்து விட்டாயா? ஊராரிடமிருந்து ஒரு நாளைக்கு ஒரு முறைதானே உணவு பெறலாம்? ஊம்!??

"ஆமாம்” என்றான் உபமன்யு, ஈனக்குரலில். ‘ஆனால் பசியில் இந்தக் கட்டளையை நான் மறந்துவிட்டேன்.” - - 'ஊராருக்குத் திரும்பத் திரும்ப நம்மை ஆதரிப்பதுதானு வேலை? நம்மைப்போல் வேறு எத்தனையே பேர்களே அவர்கள் கவனிக்கவேண்டும். அப்படி இருக்க, கிடைத்ததைக்கொண்டு திருப்தி அடையாமல் நீ பேராசையுடன் அவர்களே மீண்டும் ஆகாரம் கேட்டாயா, அழகுதான்! நீ தவறுசெய்துவிட்டாய். போ! ஆசிரமத்து மாடுகளே மேய்த்து வா. அப்போது நான் சொன்னதைப் பற்றியும் சிந்தித்தபடி இரு” என்றார் குருதேவர். உபமன்யுவுக்குத் தண்டனை தொடர்ந்தது. அவன் வழக்கம் போல ஊராரிடம் வசூலித்த உணவை தினமும் ஆசிரியரிடம் கொடுத்தான். அப்புறம் அது அவன் கண்ணில் படாது. மூன்று நாள் ஆயிற்று. தெளம்யர் காத்திருந்தார். சீடனே உணவு தேடி வருவான் என்று காத்திருந்தார். ஆனால் அவன் வரவில்லை. வராததோடு மட்டுமல்ல, இன்னும் உற்.