பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/39

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


சாதமாகத் தன் வேலைகளில் ஈடுபட்டது போலக் காணப்பட் டான். ஆசிரியர் மறுபடியும் அந்த மாணவனை அழைத்து விசாரித்தார். “என்னப்பா, எப்படி இருக்கிறாய்? காட்டுக்குப் பசுக்களை ஓட்டிச் சென்றாயே, சிரமமாக இருந்ததா?”” என்று கேட்டார். 'இல்லையே குருதேவா" என்றான் உபமன்யு, உற் சாகமாக. "இல்லை, மூன்று நாளாக ஆகாரம் இல்லாமல் இருக்கிறாயே என்பதற்காகக் கேட்டேன், பசியால் கால் தடுமாறுகிறது? தலை சுற்றுகிறதா?” “இல்லையே. எனக்குப் பசிக்கவே இல்லையே என்றான் “என்ன? பசிக்கவில்லையா? பசியை வெல்லும் வித்தை உனக்குத் தெரிந்துவிட்டதா?” என்று வியப்புடன் கேட்டார் குருதேவர், உபமன்யு பயத்தால் நடுங்கிவிட்டான். தான் மறுபடி ஒரு தவறு செய்துவிட்டதை உணர்ந்தான். தயக்கத்தோடு, 'குருதேவா, மேயப்போன பசுக்களின் பாலை நான் தினமும் குடித்துவந்தேன் என்றான். இருவரும் சிறிது நேரம் மௌனமாக இருந்தனர். சிறுவன் பரிதாபமாக விழித்தான். குருவுக்கோ வருத்தம் ஒருபுறம், கோபம் ஒரு புறம். கடைசியில் சாந்தமாகச் சொன்னார்: ' உபமன்யு, நீ பொய்யே பேச மாட்டாய் என்பதை நான் அறிவேன். நீ ஒழுங்காகவும் படிப்பில் கவனமாயும் இருக்கிறாய். நீயும் உற் சாகமாக இருக்கிறாய். மற்றவருக்கும் உற்சாகம் ஊட்டுகிறாய், ஆனால், உன்னிடம் ஒரு குறை இருக்கிறது. - இப்போதே அதை நீக்காவிட்டால் வாழ்க்கை முழுவதும் அதனால் கஷ்டப்