பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39

முள் குத்தியிருந்தது. கன்னத்தில் கண்ணி வழிந்தபடி இருந்தது.

'இந்தப் பள்ளத்தில் ஏன் உட்கார்ந்திருக்கிருய்??’ என்று குருதேவர் கேட்டார்.

தன் வேதனையையும் ஆத்திரத்தையும் அடக்கிக்கொண்டு உபமன்யு கூறினன் : "ஐயா, நான் வேண்டுமென்றே இங்கே வந்து உட்காரவில்லை. நான் இங்கே தவறி விழுந்து விட்டேன். நான் ஒரு செடியின் இலையைத் தின்றேன். உடனே என் கண்களில் நீர் கொட்டியது. பிறகு கண் மங்கியது. அப்புறம் குருடாகிவிட்டேன்’ என்று கூறி பசுக் கள் பத்திரமாகத் திரும்பினவா? என்று விசாரித்தான்.

“பசுக்கள் பத்திரமாகத் திரும்பி விட்டன” என்று உபமன்யுவின் தோழர்கள் பதிலளித்தார்கள். நீ தின்ற செடி எப்படி இருந்தது, விவரித்துச் சொல்” என்று குருதேவர் கேட்டார். பிறகு, "நீ இங்கேயே இரு. பார்வை வேண்டு மென்று கடவுளே வேண்டிக்கொள். தீவிரமாகத் தவம் செய் தால் கடவுள் உனக்குப் பார்வையை அளிப்பார். அல்லது இந்தக் குறையைத் தாங்கிக்கொள்ளும் தைரியத்தை அளிப் பார். அப்புறம் நீ ஆசிரமத்துக்குத் திரும்பு’ என் ருர்,