பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/57

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

இந்த உலகத்தில் இருக்கும் வரை ஒரு அந்தணன் கூட

அவனுடன் பேசமாட்டான்.”

'ஏன்?’ என்று கேட்டான் அர்ச்சுனன். 'ஏன? அவனுக்காக உழைத்த அந்தணர்கள் அநேக மாகக் குருடாகிவிட்டார்கள். பாவம். தினம் தவருமல், மாதக் கணக்காக, புகையும் நெருப்புக்கு முன்னே இருந்து வேதம் ஒதிவந்தால் என்ன ஆகும்? நான புகையை எழுப் பினேன்? நாட்டில் உள்ள காய்ந்த மரம் எல்லாம் தீர்ந்ததும் பச்சை மரங்களேயே எனக்குப் போட்டார் கள். அதனுல் தான் புகைந்தது. புகையெல்லாம் ஏழை அந்தணர்களின் கண்ணி லும் தொண்டையிலும் புகுந்துகொண்டது. கடைசியில் அவர் களால் தொடர்ந்து பணிபுரிய முடியவில்லே. என்ன செய்வது? அரசன் அடுத்த தேசத்திலிருந்து புரோகிதர்களே வரவழைத் துத்தான் யாகத்தை முடிக்கவேண்டி வந்தது.”

‘என்ன சொல்கிருய்? இந்த யாகம் நீண்ட காலமாக நடைபெறுகிறதா?’ என்று கேட்டான் அர்ச்சுனன். கண்ண சீனப் பார்க்க வில்லே. பார்த்திருந்தால் அவரது முகத்திலிருந்த குறும்புத்தனமான சிரிப்பைக் கவனித்திருப்பான்.

‘'நீண்டகாலமாகவா? பல ஆண்டுகளாக நடைபெறுகிறது இந்த யாகம். சுவேதகி அரசன் ஒரு யாகத்தை முடிக்க வேண்டியதுதான். அதே மூச்சில் மற்ருெரு யாகத்தைத் தொடங்கிவிடுவான். கூத்திரியர்கள் செய்யத்தக்க ஐந்து பெரும் யாகங்களேயும் அவன் செய்துவிட்டான். பிறகு ஆயிரம் அந்தணர்களுக்கு தானம் செய்தான். பிறகு, அவன் நாட்டில் பெண்களும் குழந்தைகளும் நலமாக விளங்க மற்ருெரு நோன்பு எடுத்தான்.”* - -

"அடேயப்பா, ஆசாரசீலனை அரசனுக்குக் கூட இது அதிகம்தான்’ என்ருர் கிருஷ்ணன். - 'ஆனல் என்னே என்ன பாடு படுத்திவிட்டான் பாருங் கள்’ என்று பெருமூச்சு விட்டான் அக்னி, "அதுதான் பார்த்தீர்களே. அடையாளமே தெரியாமல் போய்விட்டேன். வருஷக்கணக்காக எனக்கு உணவாகக் கிடைத்த தெல்லாம் என்ன? யாகத்திலே தொடர்ந்து சட்டி சட்டியாகக் கொட்டிய படி இருந்த நெய்தான்! நினைத்துப் பாருங்கள். ஆண்டுக் கணக்கில் நெய்யைத் தவிர வேறு ஒன்றுமே தின்னுவிட்டால் எப்படி இருக்கும்! என் உடல் நிறத்தைப் பாருங்கள். பெண்