பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/59

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உணர்வு கொண்டவை அல்ல. மேலும் பேய்களும் பூதங் களும் பிசாசுகளும் அங்கே உள்ளன. அரக்கர்களும், மனித ரத்தம் குடிக்கும் கூளிகளும் இருக்கின்றன. விசித்திரமான பறவைகளும் பிணந்தின்னிக் கழுகுகளும் பயங்கர மிருகங் களும் உள்ளன. அந்தி மறைந்தால் அந்தப் பக்கம் போக யாருக்குமே பயம். ஏனென் ருல், குழந்தை குட்டிகளேத் துஷ்ட மிருகங்கள் தூக்கிப் போய்விடும். இரவு முழுவதும் நடுக் காட்டிலிருந்து கோரமான பயங்கர ஓசை எழுந்தபடி இருக்கும். இதைக் கேட்டால் பெரியவர்களே படுக்கையில் தூக்கம் வராது புரண்டு நடுங்குவார்கள். எதாவது செய்ய வேண்டும். அந்தக் காடு அழியவேண்டும்.”

'உன்னுல் இதைத் தீர்க்கமுடியும் என்று நினைக்கிருயா? என்று சந்தேகத்துடன் கேட்டான் அர்ச்சுனன்.

"ஆமாம்” என்ருன் அக்னி, நாக்கைச் சப்புக் கொட்டிய படி ' ஆனுல் எனக்கு யாராவது உதவவேண்டும். ஏழு நாள் தனியாகவே அதைத் தின்று தீர்க்க முயன்றேன். முடியவில்லே. தொடங்கவே முடியவில்லே. இந்திரனே வான வர் உதவியுடன் அந்தக் காட்டைக் காப்பாற்றுசிறன். சோர்ந்துபோய் நான் பிரமனிடம் சென்றேன். கிருஷ்ண னிடமும் அர்ச்சுனனிடமும் போய்க் கேள்’ என்று அவர்தான் சொன்னர் . எனக்கு உதவுவீர்களா? .

அர்ச்சுனனே பதில் சொல்லட்டும் என்று கிருஷ்ணன் காத் திருந்தார். அந்தக் காடு பாண்ட வர் ராஜ்யத்தைச் சேர்ந்தது. - சிறிது நேர யோசனைக்குப் பின் அர்ச்சுனன் “ஆகா. உதவு கிருேம்’ என்ருன். ஆனல் எங் களுக்கு ஆயுதங்கள் தேவை. என்ன என்ன தெரியுமா? இப் போது இருப்பதைவிட கனமான வில் ஒன்று வேண்டும். ஏராள மான அம்புகள் வேண்டும். இதை யெல்லாம் சுமக்க ஒரு தேர் வே ண் டு ம். அதை இழுக்க வெள்ளே வெளேர் என்ற குதிரை கள் வேண்டும். சுற்றிலும் பல