பக்கம்:எக்காலத்துக்கும் ஏற்ற கதைகள்.pdf/62

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

59


னும் அர்ச்சுனனும் அம்பால் அடித்து அவற்றைத் தீயில் தள்ளினார்கள். கண் இமைப்பதற்குள் அவை தீக்கு இரை யாயின. காட்டின் உள்ளே பல மிருகங்கள் வியப்பாலும் பயத் தாலும் கண்ணை அகலத் திறந்து முழித்தபடி இருந்தன. நெருப்பு நெருங்கி வந்தது. பாம்புகள் புல் தரையில் நெளிந்து ஒடித் தப்பப் பார்த்தன. ஆனால் அதே கவனமாயிருந்த அக்னி, புல்லையெல்லாம் பொசுக்கினான். பாம்புகள் அழிந்தன.

காட்டின் உள்ளே இருந்த ஒடைகளும் குட்டைகளும் தீயின் வெப்பத்தில் கொதிக்கலாயின. மூட்டை மூட்டையாக மீன்கள் இறந்து மிதக்கலாயின.

தீயில் இறைச்சி பொசுங்கும் மணமே காடெங்கும் பர வியது. எரியும் காட்சியையும் பொசுங்கும் நாற்றத்தையும் சகிக்காமல் சுற்றிலும் இருந்த கிராமத்தார் வெளியூர்களுக்கு ஒடிப்போனார்கள். .

விண்வெளியில் வானவர்கள் சிறிது நேரம் வியப்புடன் பார்த்து நின்றர்கள், பிறகு அனைவரும் தங்கள் அரசனான தேவேந்திரனிடம் போனார்கள். விவரம் அறிந்த இந்திரன் சீறினான்.

“என்ன? அந்த முட்டாள், நெய்யுண்ணி அக்னி மறுபடி யும் எனது கோட்டையான காண்டவ வனத்தைத் தாக்கு கிறானா தட்சகனும் நானும் அவனுக்கு மறக்க முடியாத பாடம் கற்பிக்கிறோம் பார் என்று கர்ஜித்தான் இந்திரன்.

தேவர்களில் ஒருவன் அப்போது பணிவுடன் சொன்னான்: ‘அரசே, உங்களுக்கே தெரியுமே. தட்சகன், இப்போது காண்டவ வனத்திலே இல்லையே. அவன் இன்னும் குரு கூேடித்திரத்திலிருந்தே வர்வில்லையே. அவன் திரும்பியிருந் தாலும் காண்டவ வனத்தைக் காப்பது கஷ்டம்தான்.”

'கஷ்டமா? எப்படி?’ என்ருன் இந்திரன்.

'ஏனா? அக்னி இந்த முறை தனியாக இல்லையே. துணைக்கு அர்ச்சுனனும் கிருஷ்ணனும் இருக்கிறார்கள். இந்தக் கணத்தில் அவர்கள் ரதம் வானிலே, எரியும் காட் டுக்கு மேலே உயர இருக்கிறது.”

இதைக் கேட்ட இந்திரன் ஒரு கணம் தயங்கினான. கிருஷ் ணனும் அர்ச்சுனனும் புகழ்பெற்ற வீரர்கள். வெல்ல முடி யாத வீரர்கள். ஆனாலும் இந்திரனுக்கு வந்த எரிச்சலில்