பக்கம்:எக்கோவின் காதல்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

129

“தலை விதியாவது மண்ணாங்கட்டியாவது! என்னம்மா! விதவையின் பிள்ளையா நான்? அப்பா மலை போலிருக்கிறாரே? சாதிகெட்டவள் பிள்ளையா நான்? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! என்னம்மா இது? விவரமாகச் சொல்லுங்களேன்”

“பதறாதே கண்ணா! நான் இராகவாச்சாரி மகள். நீ இராமு ஆச்சாரியார் மகன். இதனால்தான் உன்னை அவமானச் சின்னம் என்று சொல்லியிருப்பார்கள். சாதியைச் சதமென எண்ணும் இவ்வுலகம் வேறு எந்தப் பெயரால் உன்னை அழைக்கும்?”

“அம்மா! இதிலென்ன சாதி வேற்றுமையிருக்கிறது? இரண்டும் ஆச்சாரியார் சாதி என்று தானே சொல்லுகிறீர்கள்?”

“ஆம்; சொல்லளவில் ஒன்று தான். நான் அய்யங்கார் வீட்டுப் பெண். உன் அப்பா பொன் வேலை செய்யும் ஆச்சாரியார்”.

“என்னம்மா? எனக்கு ஒன்றுமே புரியவில்லையே! எல்லாம் புதிராகவே இருக்கிறதே. அய்யங்கார், ஆச்சாரியார், விதவையின் பிள்ளை இவை என் மூளையைச் சிதறடிக்கச் செய்கின்றனவே. எல்லாவற்றையும் தயவுசெய்து தெளிவாகச் சொல்லுங்களேன்!”

“கண்ணா! கேள் என் கதையை. என் வாழ்க்கை ஒரு கதைதான். படிக்கிறோம் சில கதைகளை. என் வாழ்க்கையில் அச்சம்பவங்கள் உண்மையாகவே நிகழ்ந்து விட்டன. என் அப்பா இராகவாச்சாரி பெரிய மிராசுதார். வேதபுரம், பிராமணர்கள் நிறைய வாழும் ஊர். அவர் சொல்லை அந்த