பக்கம்:எக்கோவின் காதல்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்


ஊரில் யாரும் தட்டி நடக்கமாட்டார்கள். சிறிது முன் கோபக்காரர். என்னை அருமையாக வளர்த்து வந்தார், என் தாயில்லாத காரணத்தால் எனக்குத் தக்க வயது வந்ததும் திருமணப் பேச்சு நடந்தது. பணத்தாசையால் எங்காவது படுகுழியில் தள்ளி விடுவாரோ என்ற பயம் என்னைத் துன்புறுத்தி வந்தது. நல்ல வேளையாக அவராசையும் என் ஆசையும் ஒரு சேர நிறைவேறியது. நான் புகுந்த இடம் பெரும் பணக்கார வீடு. அவரும் என் மனத்திற்கேற்ற அழகும் குணமும் உடையவர். ஆகவே எனக்கும் என் அப்பாவுக்கும் திருப்தி.

“ஒராண்டு சென்றது. சென்னைக்கு ஒரு வேலையாக வந்தார் உன் அப்பா இல்லை இல்லை - என் கணவர் விழுப்புரத்திற்கு அருகே ஏற்பட்ட ‘இரயில்’ விபத்தில் இறந்துவிட்டார் அவர் என். கழுத்திலிருந்த கயிறு அறுக்கப்பட்டது. ஆயினும் கூந்தல், வண்ணச் சேலை இரவிக்கை, நகைகள் களையப்படவில்லை. அவைகளால் மட்டும் நான் மகிழ முடியுமா? வாழ்க்கைதான் இன்பமாகச் செல்லுமா? வீட்டு மூலை என் இருப்பிடம். நான் வெளியே வர அருகதை அற்றவள்; மற்றவர்கள் முகத்தில் விழிக்க மறுக்கப்பட்டவள் - விதவை என்ற ஒரு காரணத்திற்காக கழுத்திலிருந்த ஒரு கயிறு நீக்கப்பட்டதால் நான் பெண்கள் இனத்திலிருந்தே - ஏன் - மனித இனத்திலிருந்தே நீக்கப்பட்டவள் ஆனேன். என் உள்ளக் கொதிப்பு சில சமயங்களில் நீரைக் கக்கும் கண்கள் வழியாக.

“என் உள்ளக் கொதிப்பை - அந்தக் கண்ணீரின் மதிப்பை உணருவாரா என் அப்பா. அவர் மட்டுமென்ன இந்த அநியாய உலகந்தான் உணருமா? அவள் பெற்ற உன்னை ‘அவமானச்