பக்கம்:எக்கோவின் காதல்.pdf/161

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ❖

கவியரசர் முடியரசன்

159

கொண்டு பின்புறம் சென்று விட்டாள். கறுப்பணன் வந்ததும் “பொன்னம்மா!” என்று கூப்பிட்டான். அவளும் பயந்து கொண்டே வந்தாள். “ஏம்மா, ஒரு மாதிரியாயிருக்கிறே!” என்று கேட்டான். “ஒன்றுமில்லை மாமா! வாந்தி எடுத்து விட்டேன். அதுதான் ஒரு மாதிரியாய் இருக்கிறேன். வேறொன்றுமில்லை” என்றாள்.

அரங்கசாமிக்கு அன்று இரவு முழுதுமே உறக்கம் வரவில்லை. அவனும் உண்மையிலேயே வருத்தப்பட்டான். வேறு வழியோ தோன்றவுமில்லை. கடைசியாக ஒரு முடிவுக்கு வந்தான். சரி, விடியட்டும் பார்த்துக் கொள்வோம். திருமணம் அடுத்த ஆண்டில் வைத்துக் கொள்ளும்படி உறுதியாகச் சொல்லி விடுவோம் என்று திட்டமிட்டான். பொழுது புலர்ந்தது. கறுப்பணன் பதறிக்கொண்டே ஓடிவந்தான்.

"என்ன கறுப்பணா! இப்படி ஓடி வருகிறாய்?” என்று அரங்கசாமியின் தந்தை கேட்டார்.

“ராத்திரி சும்மா படுத்திருந்துச்சுங்க; காலையிலே எந்திருச்சுப் பார்த்தேன்; படுக்கையிலே நகைமட்டுங் கெடக்கு; பொன்னம்மாளைக் காணலிங்க! என்ன செய்யட்டுங்க. ஒண்ணுந் தெரியல்லையே!” என்று பதறப் பதறக் கூறினான் கறுப்பணன்.

“அய்யோ! காணவில்லையா” என்று பதைத்து எழுந்தான் அரங்கசாமி.

சுரீர் என்று 'சிகரெட்' சுட்டு விட்டது அரங்கசாமியின் கையில். அப்பொழுதுதான் எங்கிருக்கிறோம் என்ற நினைவு