பக்கம்:எக்கோவின் காதல்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

எக்கோவின் காதல் ✽

கவியரசர் முடியரசன்

19

யுணர்ந்துதான் என்று மடியும் எங்கள் அடிமையில் மோகம்’ என்று கதறியிருக்கிறார் பாரதி - என்று உணர்ச்சி பொங்க விடையளித்தான் எக்கோ.

அவன் பேச்சிலே சொக்கிப் போயிருந்த மல்லிகா, திடீரென்று எக்கோ பேச்சை நிறுத்தியவுடன் ஒன்றும் பேசமுடியாமல் திகைத்து, ஏதாவது பேசியாக வேண்டுமே என்பதற்காக என்னுடைய கடிதங்கள் தங்கட்குக் கிடைத்தி ருக்குமே’ - என்று மீண்டும் பேச்சைத் துவக்கினாள்.

‘ஆம், கிடைத்தன; இப்பொழுதுகூட உங்கள் கடிதத்தைத் தான் படித்துக் கொண்டிருந்தேன்’ என விடையிறுத்தான்.

‘ஏன் என் கடிதங்கட்கு விடை எழுதுவதில்லை? - என்று அவள் கேட்கும்பொழுது உரிமையும் அன்பும் கலந்திருந்தது அந்தக் குரலில். அவள் பார்வையில் சிறிது கூட அச்சமோ நாணமோ தென்படவில்லை. நெடுநாள் பழகியவள் போற் பேசினாள்.

‘ம்ம்....... ஒன்றுமில்லை. எழுத நேரம் இல்லை - என்று பேச்சை விழுங்கினான்.

இதுதான் சமயம் என்று கருதி நேரம் இல்லையா? மனம் இல்லையா?’ - என்று குறுக்குக் கேள்வி கேட்டாள்.

‘மனம் இருக்கிறது; மனம் என்ற ஒன்று இருப்பதாற்றானே மக்கள் நிலையைக் கண்டு வருந்துகிறது - கொதிக்கிறது என் உள்ளம்.’

‘உண்மையில் உங்கள் மனம் மக்கள் நிலையைக்கண்டு கொதிக்கிறதா? அப்படியானால் நானும் மக்களுக்குள் ஒருத்திதானே! ஏன் என் நிலைக்கு உங்கள் மனம் சிறிதாவது