பக்கம்:எக்கோவின் காதல்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

22

எக்கோவின் காதல்✽

கவியரசர் முடியரசன்


தான் நானும் பிறந்திருக்கிறேன். அந்தப் பண்பு என்னிடமும் இருக்கத்தான் செய்கிறது; புரட்சி இயக்கத்தில் நானும் உங்களோடு பணியாற்றுவேன். உங்களுக்குக் கொலைத் தண்டனை என்று கேள்விப்பட்டால் நாட்டிற்காக உயிர்கொடுத்த உத்தமன் மனைவி நான் என்று பெருமிதம் அடைவேன். ஆதலால் என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்; என்னால் உங்களுக்கு உங்கள் கொள்கைக்கு ஓர் இடையூறும் வராது என்று வீரமும் ஏக்கமும் கலந்த குரலில் பேசினாள்.

எக்கோவின் மனம் இளகி விட்டது. தலையைச் சிறிது அசைத்தான்,'ம்ம், சரி' என்று பெருமூச்சு விட்டான்.

அந்த மூச்சு அவளை ஏற்றுக் கொண்டது. அருகில் சென்றாள். கொடி, கொழுகொம்பில் தாவிப் படர்ந்தது. கற்பனைக் குளத்திலே - காதற்கொடியிலே பூத்து மலர்ந்த இரண்டு பூக்கள் ஆனார்கள்.

'மல்லிகா - என்று மெல்லிய குரலில் சொன்னான்.

'எக்கோ - என்ற சொல் அவள் ஆர்வத்தின் அடித்தளத்திலிருந்து வந்தது. 'நான் இப்பொழுதுதான் அந்தப் பெயருக்கு பொருத்தமுள்ளவளாக ஆனேன். மல்லிகை மணக்கத் தொடங்கிவிட்டாள்' - என்ற சொற்கள் அவள் இதயத்திலிருந்து உருண்டோடி வந்தன.

நான்கு நாள் வெகுவிரைவில் ஓடி மறைந்தன. விடைபெற்றுக் கொண்டு சென்று விட்டாள் மல்லிகா.

அவள் சென்ற சில நாளில் அவளிடமிருந்து கடிதம் வந்தது.

புரட்சித் துணைவரே! வணக்கம். நான் வந்ததும் என் அன்னையிடம் நமது பதிவுத் திருமணத்தைப் பற்றிச் சொல்லி