பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/15

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 பள்ளிப் பாடப் புத்தகத்திலிருந்து, பெரிய பெரிய கலைக் களஞ்சியங்கள் வரை எல்லாவற்றிலும் என்னைப் பற்றி எழுதுகிறீர்கள். என் படத்தை அச்சிட்டு வேடிக்கை பார்க்கிறீர்கள். இதற்குக் காரணம் என்ன?

உலகிலேயே நான்தான் மிகவும் விசித்திரமான மிருகம் என்று நீங்கள் முடிவுகட்டி விட்டீர்கள், அதனால்தானே ?

ஆம், நான் பல வகையிலும் விசித்திரமான பிராணிதான். முதலில் என் கால்களைப் பாருங்கள். முன் கால்கள் இரண்டும் குட்டையாயிருக்கின்றன. ஆனால், பின் கால்களோ மிகவும் நீளமாயிருக்கின்றன.