பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

33

விசும். வறண்ட பாலை வனத்தில் வசிக்கும் எங்களுக்கு அவ்வளவு அடர்த்தியான உரோ மம் எதற்கு ? என் இனத்தவரை அரேபியாவில் மட்டு மல்ல; வட ஆப்பிரிக்கா விலும் ஆஸ்திரேலியா விலும் உள்ள சில வறண்ட பிரதேசங்களி லும் காணலாம். உங்கள் தேசத்தில்கூட என் இனத்தைச் சேர்ந்த சிலர் இருக்கிருர்கள். அவர் களில் சிலர் வண்டி இழுக்கிருர்கள். சிலர் வயலை உழுகிறர்கள். கிணறுகளிலிருந்து த ண் ணி ர் இறைக்கவும் சிலர் உதவுகிறர்கள். நான் பாலைவனத்தில் வசிப்பதாகச் சொன் னேன் அல்லவா? பாலைவனம்என்ருல் உங்களுக் குத்தான் தெரியுமே! இங்கு உயரமான கட்டடங் களைப் பார்க்கவே முடியாது. பசுமையான வயல் களைப் பார்ப்பதே அபூர்வம். இங்கு மழை எப் போதாவதுதான் பெய்யும். சில இடங்களில் 6, 7 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் மழை பெய்வ துண்டு ! என்னுடைய எஜமானர் பெயர் அப்துல்லா. அவருக்குச் சொந்தமாக வீடு கிடையாது. கூடாரம் தான் அவருடைய வீடு. அவரும் அவருடைய குடும்பத்தாரும் பாலைவனத்திலே ஓரிடத்தில் நிலை யாகத் தங்கமாட்டார்கள். ஒரு வாரம் அல்லது இரண்டு வாரங்கள் ஓரிடத்தில் கூடாரம் போடு வார்கள். பிறகு அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டு