பக்கம்:எங்கள் கதையைக் கேளுங்கள்.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
மிருகங்கள் பேசினால்...?


பஞ்ச தந்திரக் கதைகளிலே, ஈசாப் கதைகளிலே மிருகங்கள் பேசுகின்றன. வேறு சில கற்பகக் கதைகளிலும் மிருகங்கள் பேசலாம். ஆனால், உண்மைலே மிருகங்கள் நட்மைப் போல் பேசுமா? ‘பேசாது’ என்பதுதான் எல்லோருக்கும் தெரியுமே!

மிருகங்களுக்கும் பேசும் சக்தி இருந்தால்...?

ஒவ்வொன்றும் தன்னுடைய கதையைத் தானே தமக்குக் கூறுமல்லவா? அவைகளுக்குப் பேசும் சக்தி இல்லாததால், அவைகளுக்குப் பதிலாக, அவை கூறுவது போல் இப்புத்தகத்தில் நான் கூறியிருக்கிறேன், மொத்தம் பத்து மிருகங்களின் கதைகளை நீங்கள் படிக்கப் போகிறீர்கள்.

“ஆமாம், இந்த மிருகங்களைப் பற்றியெல்லாம் உங்களுக்கு எப்படித் தெரியும்? என்றுதானே கேட்கிறீர்கள்?

சிங்கம். ஒரே தடவையில், மூன்று நான்கு குட்டிகள் கூடப் போடும் என்பதை நான் ‘கிர்’ வனப்பகுதிக்குப் போய்த் தெரிந்துகொண்டு வந்தேனா?

அல்லது,

கங்காருவின் குட்டி பிறந்தவுடன் ஓர் அங்குல உயரம் தான் இருக்கும் என்பதை ஆஸ்திரேலியாவுக்குப் போய் அறிந்து கொண்டு வந்தேனா?