பக்கம்:எங்கள் பாப்பா-சிறுவர் பாடல்கள்.pdf/66

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

45. தமிழ்மொழி வாழ்த்து


ஆதியில் தமிழினில் அரியதோர் இலக்கணம்
அமைத்தொளிர் அகத்தியர் பெயர்வாழி
நீதியில் நிகரற நிலவிடு திருக்குறள்
நிறுவிய வள்ளுவர் பதம்வாழி.

1

சிலப்பதி காரம்,தொல் காப்பியம், சீவக
சிந்தா மணி,செய் தோர்வாழி;
புலவர்கள் பலர்பலர் பரிவொடு பாடிய
புகழ்பெறு நாலடி யார்வாழி.

2

தந்தையின் மொழிதவ றாரகு நாதனின்
தகைமைசொல் கம்ப்ர்தம் நூல்வாழி;
நந்தமக் காகவே நல்வழி நீதிகள்
நல்கிய அவ்வையின் சீர்வாழி.

3

சிற்பமோ டோவியம் சீர்மிகு மருத்துவம்
செப்பிய புலவர்கள் திறீம்வாழி ;
அற்புத அடியவர் ஆழ்வார் பாடிய
அழகொளிர் பாடலின் புகழ்வாழி.

4

நூறுநூ-றாயிரம் நூல்கள் இயற்றிய
துண்ணறி வளர்தம் வழிவாழி :
வேறுநற் கலைபல சீருடன் வெளிவர
வேண்டி டு வோம்தமிழ் மொழிவாழி.

5

------------