பக்கம்:எங்கே போகிறோம்.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

148 எங்கே போகிறோம்?

குற்றம்; பாபம்! இதற்கோர் முற்றுப்புள்ளி வைக்காமல் எங்கோ போய்க்கொண்டிருக்கிறோம்!

திருக்குளங்களைக் கவனிக்காமல் திருக்கோயில்களுக்குக் குடமுழுக்கு விழாக்கள் செய்து கொண்டிருக்கிறோம்! நாம் மழைவளம் பெறுவோம்! பெய்யும் மழை வளத்தைப் பாதுகாப்போம்!

“நிலனெளி மருங்கில் நீர் நிலை பெருகத்
தட்டோரம்ம இவண் தட்டட்டோரே!
தள்ளாதோர் இவண் தள்ளாதோரே!”

என்ற கவிஞனின் பாடல் வரிகளுக்கு வாழ்க்கையில் பொருள் காண்போமாக!

இயற்கை வளம் இந்நிலவுலகத்திற்கு ஒரு கொடை. இயற்கையென்பது என்ன என்று வரையறை செய்ய இயலாது. நம்மைச் சுற்றியுள்ள உலகமனைத்தும் இயற்கையே!

மலை வளம், காடு வளம், நில வளம், வளி வழங்கும் ஞாலம், வெப்பம் தந்து வாழ்வளிக்கும் ஞாலம் திரி திரு கதிரவன் தண்ணென நிலவு பொழியும் சந்திரன்; விலங் கினங்கள்; - பறவையினங்கள் எல்லாமே மானுட வாழ்க்கைக்கு வளம் சேர்ப்பவை; வாழ்க்கைக்குத் தேவையானவை.

அதனால் தான் கடவுளைக் காணும் களம், இயற்கை என்றனர். அப்பரடிகள் “மூரி முழங்கொலி நீர் ஆனான் கண்டாய்!” என்றும் “வாசமலரெலாம் ஆனாய் நீயே!” என்றும் “பழத்திடைச் சுவை ஒப்பாய்!” என்றும் அருளியுள்ளமை அறிக.

தாயுமானார் மலர் கொய்து இறைவனுக்குப் பூசனை செய்ய மனம் ஒருப்படா நிலையில் பார்க்கின்ற மலரூடும்