பக்கம்:எச்சரிக்கை.pdf/10

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ம் 5. கவலைதனை நீக்கு மடங்கல் தனைப்போலே -விடிய மலர்ந்த மலர்போலே உடலை உரமாக்கு - உனது உளத்தை விரிவாக்கு. அடுத்த பொழில் போலே - மலரில் அவிழ்ந்த மணம் போலே இடத்தை எழிலாக்கு... உனது இயல்பை வெளியாக்கு. கடல்வெண் ணுரைபோலே - உருகிக் கமழும் நெய்போலே உடையை ஒளியாக்கு- உனது உணவைச் சுவையாக்கு. புடத்தின் பொன்போலே -- உண்மைப் புலவன் கவிபோலே நடத்தை நலமாக்கு- உனது நட்பை நிலையாக்கு. நடுகல் நிலைபோலே --மகவின் நகைத்த முகம் போலே கடமை கருத்தாக்கு- உனது கலையைச் செயலாக்கு. சடையின் நதிபோலே- பளிங்காய்ச் சமைந்த நீர்போலே உடமை பொதுவாக்கு-- உனது உரையைத் தெளிவாக்கு. படிப்பின் பயன்போலே - பரிதி பகைத்த பனிபோலே கடவுள் அருள் நோக்கு-உனது கவலை தனை நீக்கு.

10

10

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/10&oldid=1730680" இலிருந்து மீள்விக்கப்பட்டது