பக்கம்:எச்சரிக்கை.pdf/16

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

11. வாடும் பயிர் உலகெனும் தாய் வயிற்றில் - பயிராய் உலர்வதற் கோபிறந்தேன் பலபல பல்லாகி- பரவிடும் கருமுகிலே வானில் பாற்றினைக் கதிர்தருவேன் - பார்ப்பே பதரா திருவென்றே சாற்றிய கிளிமொழியுன் - காதில் சற்றுமுன் புகவிலையோ? விதியென அழுங்கன்றிற்-கென்னை விருப்புடன் பசுகாட்டி புதுத் தினைப் புல்புசிப்பாய்-கொஞ்சம் பொறுத்தெனப் புகல்வதைப்பார் பொன்னிறத் தினைக் குத்தி- இடித்துப் புதுத்தேன் தனில் பிசைந்து அன்னை யெமக்களிப்பாள்---எனுஞ்சொல் அருகினில் கேட்குதுகாண் குமரி மகிழ்ந்தன்று- கொடிக்கோர் கொழுகொம் புதவுபுனம் எமர்களிப் புறவிளைந்து - வாழ்க என்றசொல் பொய்ப்பதுவோ? உயிர்களுக் குதவுவதே- மிகமிக உயர்தர அறமெனவே மயலற மறையாய்ந்தோர்-திருவாய் மலர்ந்ததை மறந்தனையோ? வாழவும் வாழ்வேன் நான் - பிறர்க்கு வாழ்வளிக் கவும் வல்லேன் வாழுவ தறியார்போல் - மழையாய் வாரா தொழிவாயோ!

16

16

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/16&oldid=1730687" இலிருந்து மீள்விக்கப்பட்டது