பக்கம்:எச்சரிக்கை.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. கத்திரிச்செடியின் கவலை கத்திரிக் காய்ச்செடி யென்றெனைச் சொல்வர் காணுந் தமிழரெல்லாம். சத்து மிகுந்த உணவெனக்- காயைச் சமைத்துப் புசித்திடுவார் காப்பவர் தங்களைக் காக்கவே -எனைக் கடவுள் படைத்ததினால் பூப்பதுங் காய்ப்பது மாகிய-தொழிலில் பொழுதைக் கழித்திடுவேன் காற்று வெளிச்ச மிருந்தநல் - விடத்தில் கருகரு வெனவளர்ந்து நாற்றுப் பருவ மதனிலே- மிகவும் நன்றாக வேயிருந்தேன் சின்னஞ் சிறிய உருவமாய் - எழில் சிறிதுமில் லாதது மாய் இன்னல் படும்படி யாகவே என்னை இந்த இடத்தில் நட்டான் அறுகுபுல் பூண்டெனைச் சுற்றிலும் - முளைத்து அடர்ந்து வளர்வதினால் சிறையில் அடைத்தது போலவே - இன்று சீரழி வுற்றிடுவேன் கிழத்தனம் வந்தது போலவே-யாரும் கேள்வி முறையுமின்றி பழுத்துதிர் கின்ற இலைகளாய்ப்-பாரில் பயனற்று வாடுகிறேன் தாங்கவொண் ணாதநோய் வாயிலே பட்டுத் தவித்து மெலிவதனால் ஓங்கவொண் ணாத நிலையிலே - இன்று உள்ளங் குமுறுகிறேன்

17

17

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/17&oldid=1730688" இலிருந்து மீள்விக்கப்பட்டது