பக்கம்:எச்சரிக்கை.pdf/19

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

13. மா லை வேளை எழில்மி குந்த மாலை வேளை யெனக்கி ரங்கி வருகுது இதயம் கடலி னலைகள் போல இன்பம் பொங்கிப் பெருகுது. உழவுத் தொழிலைக் காட்டி லும்மு யர்ந்த தொன்றுண் டோவெனும் உள்ளங் குளிரப் பண்ணுங் குழலி னோசை கற்கண்டே யெனும் வழிமு ழுவதும் நரியும் புலியும் வருத்து கின்ற மலையிலே வாழ்க்கைத் துணைவர் மாட்டை மேய்த்து வந்து சேரும் நிலையிலே பொழுது முழுதும் புழுதிக் காட்டில் புல்லைத் தேடுங் கன்றுகள் பொங்கும் அன்புத் தாயைக் கண்டு புதுமை இன்ப மொன்றவே பழுதி லாது வரகம் பயிரில் பாழுங் களையைக் களையவே பார்த்தெ னைச்ச வித்த மக்கள் பரவ சித்து வளையவே முழுது ணர்ந்த ஞானி காந்தி ணர்ந்தஞானி முகம லர்ச்சி போலவே மோகனத்தின் சீவ னாம்முச் சந்தி வருக சாலவே தெர்ழுது வாழ்த்த வேண்டும் சென்று தூய்மை யாக்கி வீட்டையே தொடர்ந்து தெய்வம் காக்க வென்று தூப தீபங் காட்டியே.

19

19

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/19&oldid=1730690" இலிருந்து மீள்விக்கப்பட்டது