பக்கம்:எச்சரிக்கை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16. உதயம் கொக்கரக் கோவெனக் கூவின - ஊரில் கோழிக் குலமனைத்தும் மிக்க மகிழ்ச்சி பெருகுக-இந்த மேதினி மீதெனவே. மெய்மறந் துறங்கிடும் யாவரும் - மெது வாக உடலசைத்து கைக ளுதறி நிமிர்த்ததும் - தத்தம் கண்கள் மலர்ந்தனரே. இரவிற் பொழிந்த மழையினால்- வறண் டிருந்த அருவி கரை பெருகிப் பொலிவுடன் இன்னிசை பாடிப் பெருமகிழ் வளித்தனவே மையிருள் கெளவிய மானிலம் - தனை மலரும் கதிரவனும் பையப் பசும்பொன் கரங்களால் - பற்றிப் பக்குவ மாயணைந்தான் அலைகடல் நீரை முழுவதும்-முகில் அள்ளி இறைத்து வீட்டு மலைகளி னூடு தவழ்வது- அஞ்சி மறைவது போலு மம்மா! சோம்பல் வறுமை பசிப்பிணிக் சூரை யிடும்மனைகள் கள்வர் பூம்புனல் பொய்கை மலர்கள்போல்- இன்று பொலியத் தொடங்கினவே கத்தியை ஏந்திய வீரரும் - வீணில் காலங் கழிப்பவரும் சித்தம் மகிழ்ந்து கலப்பைகள் - தூக்கிச் செல்ல முயன்றிடுவார்

22

22

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/22&oldid=1730693" இலிருந்து மீள்விக்கப்பட்டது