பக்கம்:எச்சரிக்கை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

20. வைகறைப் பறவைகள் சாலை யருகினிலே-மனச் சஞ்சலந் தீர்க்கு மெழில் சோலையு முண்டதிலே-உண்டு சுந்தரப் பூங்குயிலும் புத்தம் புதியதொரு - விடியல் புதுமை நுகர்ந்துகொண்டே சித்தம் மகிழ்ந்திருக்கும் - மயில் சிறுகிளை மீதினிலே. மாணிக்கக் கண்படைத்த- குயிலே! மலர்மணக் காற்றிடையே வீணைக்கு வெட்கம்தரும்-உன் குரல் விரவின் நனி இனிக்கும். என்று கிளியுரைக்க - நாரை இசை விருந் தென்றிருக்க நன்றெனப் பூங்குயிலும் -மெல்ல நகைத்தவை மெய் மறக்க இன்பக் கதிரவனே- வருக இதயம் களிப்புறவே நின்பெறும் நல்லொளியால்- இருள் நீங்கயிந் நீணி லத்தே கண்பெற்ற நற்பயனாய்-எமக்குக் காட்சி யளித்திடவே விண்பெற்ற மாமணியே- வருக விரைந்தென் றிசைக்கையிலே தேக்கு மரத்தினிலே --மூக்கைத் தீட்டித் திடுக்கிடத்தான் காக்கைகல் கஃகெனவே- இரைந்து கரைந்தது விடிந்ததென்றே.

29

29

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/29&oldid=1730700" இலிருந்து மீள்விக்கப்பட்டது