பக்கம்:எச்சரிக்கை.pdf/30

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

21. கீர்த்தி கிடைக்கும் வழி ஆர்த்தெழுமிப் பெருங்கடல்சூ ழவனி மீதில் அன்றிருந்த பேரறிஞர் ஆய்ந்து முத்தாய்க் கோர்த்தெழுதி வைத்தபல நூல்க ளெல்லாம் கூறுவதொன் றென்றான்ஃ தென்ன வென்றேன் கீர்த்தியென உரைத்திடுவார் மனிதர் கையில் கிடைத்தால் போதும்பிறவி தீர்ந்த தென்றான் நேர்த்தியென நானதனை நம்பி னேனாய் நெடுநாட்கள் தேடினேன் தேடினேனே முப்போதும் பால்பழமா யுண்டு பார்த்தேன் மூக்குக்குக் கண்ணாடி போட்டும் பார்த்தேன் தப்பாமல் நாள்தோறும் காரி லேறித் தார்ரோடும் தூளெழும்ப ஓட்டிப் பார்த்தேன் சுப்பையன் கடைதனிலும் கேட்டுப் பார்த்தேன் சுக்குண்டு மிளகுண்டென் றவனுஞ் சொன்னான் அப்பப்பா அக்கீர்த்தி எனக்குக் கிட்ட ஆண்டவனுக் கபிசேகங் கூடச் செய்தேன். அழகான உடையெல்லாம் தரித்துப் பார்த்தேன் அமரிக்கன் கிராப்புந்தான் வைத்துப் பார்த்தேன். நிழலாக இருந்தாலும் குடைம டக்கேன் நீரினிலும் செருப்புக்கா லுடன் நடந்தேன் பழகாத நடைநொடிபாவனைக ளெல்லாம் பழகியதை வழக்கத்தில் கொண்டு வந்தேன் விழலுக்கே இறைத்தநீர் போல யாவும் வீணாச்சு பணம்மெத்த விரய மாச்சு. தேடாத இடங்களெல்லாம் தேடித் தேடித் தேகமெலாம் வியர் வொழுக நாளும் நாளும் ஆடாத ஆட்டங்கள் பலவு மாடி அலுத்தவனாய் ஓரிடத்தி லுட்கார்ந் தேனே காடாக அந்தயிட மிருந்த தங்கே கருங்குயி லொன் றெனை நோக்கிக் கனிவுகொண்டு ஆடவன் நீ யானாலக் கீர்த்தி தன்னை அடையும் வழி உரைத்திடுவே னெனவேபாடும்

30

30

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/30&oldid=1730686" இலிருந்து மீள்விக்கப்பட்டது