பக்கம்:எச்சரிக்கை.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எண்ணிடுவோம் எண்ணிடுவோம்தமிழர் நாமே எண்ணறியாப் பெருவலிமை பெற்றோர் நாமே கண்ணதிலே காண்பதனை உடனே கற்றுக் கல்லாதா ரெல்லார்க்கும் சொல்வோம் நாமே திண்ணியர்க ளாயிருந்திவ் வுலகிற் காணும் தீமைகள்யா வங்காயச் செய்வோம் நாமே புண்ணியமாம் வழிகளிலே பொருளைத் தேடிப் புசித்திடுவோம் சமமாய்ப்பங் கிட்டு நாமே சண்டைகளோ சச்சரவோ நேரா வண்ணம் சகத்தின்மேல் அன்பறத்தை வளர்ப்போம் நாமே அண்டினவர் யாவரையும் மக்க ளாக அறவணைத்துக் கொண்டுமனங் களிப்போம் நாமே பண்டைய நம் பெருமைகளைக் கீதமாகப் பசுந்தமிழால் பக்தியுடன் இசைப்போம் நாமே கண்டவர்கள் களிகூற உண்மை நம்மைக் கலந்திடுமேல் கீர்த்திதனை காண்போம் நாமே கூடுகட்டத் தெரியாத குயிலென் றாலும் கூறினதில் அவ்வளவும் உண்மை யுண்டு காடுவிட்டு வருவதற்கும் மனமில் லாமல் கவனமெலாம் குயிற்குரலில் கலந்தி ருந்தேன் பாடுபட்டால் பயனுண் டென் றெனது நெஞ்சம் பரவசமா யண்ணாந்து பார்த்தேன்; அந்தோ கேடுகெட்ட கிழநாரை யொன்றுவந்து கீதம்பாடுங்குயிலை வீரட்டிற் றம்மா! 4

31

31

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/31&oldid=1730701" இலிருந்து மீள்விக்கப்பட்டது