பக்கம்:எச்சரிக்கை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26. அறிக்கை அழகுகனிந் தொழுகுகிற நொய்யலாற்றின் அருகினிலே சந்தோஷ புரமென் றோரூர் வழிமீது தென்புறத்தில் பெருமாள் கோவில் வாசலுக்கு வலப்புறத்தில் வானளாவும் நிழல்தருநல் லரசமரம் மரத்தைச் சுற்றி நேர்த்தியாய் என்றென்றும் நிலைத்திருக்கும் பழங்காலப் பெரியோர்கள் கட்டி வைத்த பளிங்குபோன் றொளிருமொரு மேடை யுண்டு சனிக்கிழமை முன்னிரவில் வழக்கம் போலச் சனங்களெலாம் திரள்திரளாய் வந்து சேர்வார் பனியெனினும் மழையெனினும் கோவிலுக்குள் பசனைமட்டும் தவறாமல் நடக்கும் பக்தி நனிமிகுந்த ஒருசிலர்கள் மெய் மறந்து நடுச்சாம மாகும்வரை யாடிப் பாடி இனிமைமிகு பழந்தேங்காய் சுண்டல் வைத்து இன்பமாய்ப் பூசைதனை முடிக்கும் போது. செந்தமிழ்நூற் கடலிடையே மூழ்கி மூழ்கிச் சிந்தைமிகத் தெளிவடைந்த புவன வீட்டில் இந்தவுல கந்தனிலே இதுபோல் வேறொன் றிருந்ததிலை யென்றென்று மென முந்திவெகு நாளிருந்து தப்பி வந்து யக்க மூதறிஞர் போன்றினிய மொழிகள் பேசும் அந்தமிலாப் பேரழகு பெற்ற நல்ல அருங்கிளி யொன்றரச மரந்தனி லிருந்தே ஆர்பெற்ற குழந்தைகளோ மேடை மீது அன்னந்தண் ணீரின்றி அந்தோ அந்தோ போர்வையொரு கையகல மில்லா நின்று பொறுக்காத துன்பத்தால் புலம்பா நிற்கப் பார்ப்பதற்கு வேடிக்கை யாக அங்கே பழம்தேஙகா யெல்லாமும் வைத்துப் பண்ணும் ஆர்ப்பாட்டம் சகிக்கவே கூட வில்லை ஆண்டவனே என்றறிக்கை யிடத் தப்பாதே.

36

36

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/36&oldid=1730706" இலிருந்து மீள்விக்கப்பட்டது