பக்கம்:எச்சரிக்கை.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. நான் எல்லாமும் வல்ல இறைவனே - உல கெங்கும் நிறைந்தவ னே நலலோர்கள் தம்மி வொருவனாய் - உன்னை நாளும் வணங் கிடுவேன். இதயக் கடவி லிருந்திடும் - முதலை என்ற பேராசையினால். பதறப் பலபல உயிர்களைச்-சும்மா பற்றி விழுங்கிடும் நான், இன்புறு வோர்களுக் கின்னலைத்-தினம் இயன்ற அளவியற்றிக் துன்புறு வோர்களைத் தூவெனத்...துப்பித் தூரம் துறத்திடும் நான், பொதுநலம் பொதுநலம் என்றுதான் பலரும் புகழம் புகன்று விட்டு பொதுநல மென்ப தனைத்தையும் - சுயமாய்ப் பொருந்தவே துய்த்திடும் நான், ஒண்டச் சிறுநிழ லின்றியும் - பசிக் குண்ண உணவின்றியும் அண்டை யயலிற் சகோதரர்- அவற் ஆவலாய்ப் பார்த்திடும் நான், பலவித மானயென் பாவங்கள் - பிறர் பார்க்கக் கூடாதபடி செல்வத் திரைமறை வாக்கியே - பூசை செய்யப் புகுந்திடும் நான், சக்தி படைத்த மொழிகளால் - மக்கள் தண்டனை யைத்தவிர்த்து முக்தி யருளுக என்றுதான் - வந்து மொழிந்துநின் முன்பிருந்தே!

37

37

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/37&oldid=1730707" இலிருந்து மீள்விக்கப்பட்டது