பக்கம்:எச்சரிக்கை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30. முழக்கம் உழைப்பு வர்க்கு மட்டு முலகம் உரிமையுள்ள தென்றுதான் எழுப்பு கின்ற ஓசை விண்ணி லிடிமு ழங்கு தின்று தான் பிறந்த சொந்த நாட்டி லெவனும் பிச்சை யேற்றுண் ணாமலே இறந்து போகு மட்டு மினிதி ருந்து வாழ எண்ணியே காலை மாலை யாயு ழைப்போன் கண்க லங்கி வாட வே வேலை யற்ற வீணன் வயிறு வெடிக்கத் தின்றிங் காடவே தமக்கு வேண்டு மென்று செல்வர் தாமு ரைக்கும் பொருளெல்லாம் எமக்கும் வேண்டு மென்று ரைக்கும் ஏழைமக்கள் திர ளெல்லாம் சுயந லத்தை நாடிச் செல்வர் சூது வாதை யுன்னியே பயமு றுத்து வார்க ளென்னில் பழிசு மப்ப ரென்னவே, மற்று முண்மை யன்பு கடமை மறந்து விட்ட மனிதனைப் பெற்ற தந்தை யேனு மெதிர்த்துப் பேச வேண்டு மினியென சத்தி யம்நம் பாம விந்தச் சத்தில் வாழு வோர்க்கெலாம் மொத்த மாக துக்கம் வந்து மூளும் நாளைப் பார்க்கலாம்.

40

40

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/40&oldid=1730710" இலிருந்து மீள்விக்கப்பட்டது