பக்கம்:எச்சரிக்கை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

31. கூடவரும் பொருள் இல்லை அந்தப் பெரிய நகரிலே - ஒரு அழகிய சோலை நடுவிலே இந்த உலகில்வே றெங்கிலும் -இல்லை என்னும் படியொரு மாளிகை. தென்றல் இனிமை கலந்ததாய் - எழில் தெய்விக மானபொன் மாலையில் அன்றங் கொருவன் இருந்தனன்- அயர்ந் தழகிய பஞ்சணை மீதிலே. செல்வம் நிறையத் திரட்டியே -அதைச் சிந்தை குளிரச் செல்விடல் நல்லுயி ரின்பய னென்னவெ - வாழ் நாளில் உறுதியாய் நம்பினான். சுருங்கித் தளர்ந்த அவன் முகம்- பல சுகங்களில் மூழ்கிச் சலித்தபின் நெருங்குந் துயரை நினைப்பதால் -வரும் நெஞ்சப் பதைப்பினைக் காட்டுமே. அன்றய மாலைக் கதிரவன் -- தனது அந்தியத் தறிகுறி யாமென நின்று மறைந்தனன் மேற்கிலே உடல் நிலையற்ற தென்நினைப் பூட்டியே. உள்ளம் பதைத்து; கண்களில் - முத்தாய் உருண்ட திரண்டொரு நீர்த்துளி பிள்ளையும் பெண்டுமற் றேனெனச் - சிறிது பேசவும் செய்தனன் ஏக்கமாய். பொன்னுடன் பூமி பொருளெல்லாம் - இங்கு போதும் அளவு திரட்டினேன் என்னுடன் கூடவரும்பொருள்-ஒன்றும் இல்லை இவைகளி லென்னவே.

41

41

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/41&oldid=1730711" இலிருந்து மீள்விக்கப்பட்டது