பக்கம்:எச்சரிக்கை.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

32. பி ரி வு பிரிவு இதயந் தன்னி வொருதுளி யேனு மிரக்கமில் லாதவனாய் - என்றும் இனிமை கலந்தொரு வார்த்தையுங் கூ.ட இயம்பறி யாதவனாய் உதய மாகும் பரிதியைக் கண்டஞ்சி ஒழியும் இருளெனவே-நல்ல உண்மை யைக்கண் டொழிந்திவ் வுலகில் உலோபியு மாயிருந்தேன் பணத்தைப் பெரிதென எண்ணிநான் பண்ணின பாவம் பலபல வர்ம் - அதைப் பன்னிச் சொல்லவும் கூசுதே யென்மனம் பார்த்தவர் சீயெனவே பிணத்தைத் தேடித் திரியும் நரியெனப் பெரிதும் திரிந்தலைந்தேன் - என்னைப் பெற்ற தாயிக்கும் வஞ்சனை யாகவே பிழைகள் பல புரிந்தேன் இந்த மானில மீதினி லென்னதென் றிருக்கும் பொருளனைத்தும் - இனி எவனுக்குச் சொந்த மாகிற தோ அதை எள்ளள வும் அறியேன் பந்த பாசங்கள் யாவும் பெரும்புலி பாய்ந்த புதரிடையே - எதிர் பட்ட சிறிய சிலந்தி வலையெனப் பட்டென் றறுபடுதே. கொய்த கொழுந்தென வாடி யுலர்ந்து குலைந்தது என்னுடலும் - ஒரு கூகை யருகினில் வந்தினி வாவெனக் கூவி யழைக்கிறது செய்த செயல்களில் செல்லும் வழித்துணை சிறிதும் இல்லாததினால் - அந்தோ செய்வ தென்னினி யென்னவ ருந்தியென் சிவன் பிரிகிறதே.

42

42

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/42&oldid=1730712" இலிருந்து மீள்விக்கப்பட்டது