பக்கம்:எச்சரிக்கை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

35. மனிதனுய் வாழ்க! அன்பு மிக்க ஆருயிர்ச்ச கோதரா-இன்பம் அனைத்து முன்னைத் தேடி யோடி வருதடா! உன்பொ றுப்பு நீயு ணர்ந்திவ் வுலகிலே - நாளும் உழைத்து வாழ வேண்டு மென்று கருதடா? கதிர்க்க ரத்தி னால்நெ ருப்பு போலவே பரிதி காய்ந்தெ ரிக்க வேநி னைத்த போதிலும் நதிக்கரைக்கண் நின்ற நாவல் மரநிழல்-வாழும் நண்டு தவளை மண்டை காய்வ தில்லையே. அலைய டித்துக் குலைந டுக்கும் கடலிலே- நல்ல அறிவுத் திறமை யோட மைத்த படகிலே தொலைவிடத்தை யுங்க டந்து செல்வது- மிகவும் சுலப சாத்ய மென்று சொல்ல வேண்டுமோ மலையெ னக்கு வித்த பஞ்சு தன்னிலே - குன்றி மணிநெருப்பு பட்ட மாத்தி ரத்திலே இலையெனப்பு கன்ற வார்த்தையின்னமும் - உன்றன் இதய மேன றிந்து கொள்ள வில்லையோ, கால்ச றுக்க வான ளாவி நின்றதோர் - பெரிய கருங்கற் பாறை யாயி ருந்த போதிலும் நூல்சிறுத்த துனிப டைத்த உளியினால் - சுக்கல் நூறு கோடி யாவ துண்மை யல்லவோ? இந்தி ராதி தேவ ரான போதிலும் - பிறர்க் கின்ன லுண்டு பண்ணிவாழ வல்லரோ? அந்த கார மே நிறைந்த போதிலும் - சிறிய அகல்வி ளக்கு மட்டும் போது மல்லவோ? இறுதி சீவ னுக்கு நேரு மென்னினும்-- ஒரு இம்மி யும்மனங்க லங்கி டாமலே உறுதி மிக்க உண்மை வாய்ந்த மனிதனாய் - வாழ்க உலக மெங்குந் தெய்வ மென்று ரைக்கவே!

40

46

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/46&oldid=1730727" இலிருந்து மீள்விக்கப்பட்டது