பக்கம்:எச்சரிக்கை.pdf/49

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38. பிரம தரிசனம் வாசித்துக் கொண்டிருந்தேன் ஒருநாள் மாலை வருவீரா போய்வருவோ மென்றான் நண்பன் யோசித்துப் பார்ப்பதற்கும் தோண வில்லை ஊஹும்நான் வரவில்லை யென்றால் எங்கள் நேசத்துக் கழகாகா தென்வே நானும் நினைவுமறந் தவன் பின்னூ டெழுந்து சென்றேன் தேசத்தைக் கடந்து சற்று நேரத்துக்குள் தேவருல கந்தாண்டிச் சென்றோம் மேலும் எப்போதோ எனதாசை நண்ப னோடு எனைப்படைத்த அயனிடம்போய் வருவோ மென்ற தப்போதென் நினைவுக்கு வந்த தால்சற் றானந்தம் தோய்ந்தமனத் துடனே நண்பா இப்போது தானறிந்தேன் நினது எண்ணம் என்றென்றும் இந்நன்றி மறவேன் ஆனால் அப்போதில் அமர்ந்தவன் நம் முடனே பேச அவகாச மளிப்பானா ? என்று கேட்டேன் முன் கூட்டிச் சொல்லியுளேன் சும்மா யிங்கு முணுமுணுக்க வேண்டாங்காண்' என்றான் நண்பன் நன்காட்டின் அமைதியைப்போ லிருந்த தால்நான் நடுநடுங்கா திருப்பதற்கும் முயன்றேன் ஆனால் என்கூட்டை விட்டுயிர்தான் போவ தேபோல் இருந்ததொரு கணநேரம் நீளப் பார்த்தேன் முன்கேட்டில் காவலின்றி யார்வந் தாலும் வருகவெனும் முத்தெழுத்தைக் கண்டின் புற்றேன் அழகியநன் மலர்மீது வீற்றி ருக்கும் ஆண்டவனெம் மிருவரையும் அணைத்துக் கொண்டு குழந்தைகளின் குசலத்தை வினவி னோனாய்க் குந்துவதற் காசனமுந் தந்த தோடு பழம்பாலும் கொண்டுவரப் பணித்தார், வேண்டாம் பலகாரம் சாப்பிட்டோம் வரும்போது உங்கள் தொழிற் சாலை பார்க்கணுமென் றென்னைப் பன்னாள் தொந்திரவிக் கவிஞன்செய வந்தோ மென்றான்

49.

49

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/49&oldid=1730724" இலிருந்து மீள்விக்கப்பட்டது