பக்கம்:எச்சரிக்கை.pdf/5

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1. வாழ்த்து என்னை யாண்ட ருள்வாய் - அன்னாய் என்னை யாண்ட ருள்வாய் என்னை யீன்ற அன்னாய் - இனி நீ என்னை யாண்ட ருள்வாய். உன்வ யிற்று தித்தேன் - உன்பால் உண்டு டல்வளர்ந்தேன் ன் உன்தி ருப்ப ணிக்கே- க என்ற : உயிரை யர்ப்பணித்தேன். . சின்னஞ் சிற்றெ றும்பு-யானை செடி மரங்க ளெல்லாம் மன்னி வாழ வென்றே - உன்பொன் மடியி லேந்து கின்றாய். என்ன தென்று பேணப்-பலவாய் இங்கி ருப்ப தெல்லாம் உன்ன தென்ற வுண்மை - என்றோ உணர்ந்து கொண்டு விட்டேன். நின்ன லத்தை நாடி எனது நெஞ்சி யங்கு மாயின் என்ன லங்கள் யாவும்-உடனே இணைந்து பூர்த்தி யாகும். அன்னை யன்னை யென்று - போற்றி அருளை யேற்ப தன்றி பின்னை யொன்று வேண்டேன்- சீவன் பிரிந்து போகு மட்டும். செந்த மிழ்கு ளத்தின் - மலர்கள் சேவ டிக்கண் சிந்தி வந்த னங்கள் செய் து - உன்னை வணங்கி வாழ்த்து கின்றேன்.

.5

5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/5&oldid=1730675" இலிருந்து மீள்விக்கப்பட்டது