பக்கம்:எச்சரிக்கை.pdf/50

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஓரினமும் ஒருகுலமு மாயுள் ளோம்நாம் உங்களுக்கென் னனுமதியும் வேண்டு மோவென் றீரண்டு முகங்களிலும் மலர்ச்சி தோன்ற எழுந்துநடந் தார்முன்னால் எங்க ளோடு பாரினிலே முன்போலச் சிருஷ்டி பண்ணப் பழங்கிழவ னாகிவிட்டேன் சாத்திய மில்லை பெருக்கா யிருப்பதன்றி வேலை யெல்லாம் பிள்ளையின்மேற் பார்வையில்தான் நடக்கு தென்றார் ? பட்டென்று விளங்கிற்று இன்று பாரில் பாவிகளின் துகைபெருகும் கார ணந்தான் கட்டுக்குள் அடங்காமல கோபம் வந்தால் கதையினைப்பின் கேட்கணுமோ? ஐயா, பாரும்! சட்டென்று இன்றுமது பதவி தன்னைத் தள்ளுபடி செய்திடுவீர் இல்லை யானால் மட்டாக மனிதர்களே மலிந்து போவார் மண்ணுலகந் தாங்காது இனிமே லென்றேன் பிரமனுக்கோ முகந்தனில்ச யாட வில்லை பேசுவது யாதேனவும் புரிய வில்லை சிரங்குனிந்த படியிருந்து எதையோ நெஞ்சில் சிந்திக்கத் தொடங்கிவிட்டார் அப்போ தங்கே பரமாணுச் சக்திகுண்டு வெடிப்ப தேபோல் படீரென்ற சத்தத்தால் துள்ளி வீழ்ந்தேன் பிரமனையும் நண்பனையும் காண வில்லை பிள்ளை மட்டும் பட்டாசு சுடக்கண் டேனே !

50

50

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/50&oldid=1730723" இலிருந்து மீள்விக்கப்பட்டது