பக்கம்:எச்சரிக்கை.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

40. மங்கையின் மகிழ்ச்சி ஆற்றுக்குச் சென்றினிய நீரி லாடி ஆவலாய் வந்துகுட மிறக்கி வைத்துச் சாற்றுமண மலர்பறித்துக் கொண்டு வந்து சந்திரனைப் போலுமெழில் செண்டாய்க் கட்டி கூற்றுவனே யெனும்படியாய் அஞ்ச னத்தைக் குழைத்தழகாய் விழிக் கிட்டுத் திலகம் வைத்துப் போற்றுகிற புத்தாடை யுடுத்திப் பெண்மை பொலியமனம் பூரித்துப் பொங்கா நின்றாள் மூன்றிலைநன் றாய்ப்பெருக்கிக் குளிர்ந்த நீரை முத்தெனவே யள்ளியள்ளித் தெளித்துவிட்டு நன்றெனப்பொன் கிண்ணத்தைத் திறந்து கோலம் நவநவமாய்ப் போட்டதன்பின் நறிய வான அன்றலர்ந்த மலர்மணத்தை யளைந்து கொண்டே ஆனந்த மூட்ட அசைந்தசைந்து வந்த தென்றல்தனைக் கண்டுலகை மறந்தாளின்பம் தேகமெல்லாம் பரவிடவே திகைத்தா ளாகி, தாமரைதன் னிதழ்க்கதவை மூடக் கண்ட தண்குமுதம் கண்மலர்ந்து தகைமை கூறக் காமலரில் மதுவைநனி யுண்ட வண்டு கண்மயங்கி வழிநெருடும் காட்சி தன்னை மாமரச்சோ லைக்குயிலார் மனங்க சிந்து மணம்புரிந்த தன்பெடைக்கு மகிழ்ச்சி யூட்டக் கோமளநல் விசையமுதாய் வடிக்கக் கேட்டுக் குளுகுளெனத் தன்நெஞ்சுங் குளிர லானாள் மெத்தமெத்தச் சலித்தவன் போல் கதிரோன் தானும் மேற்றிசையில் போய்மறைய லானான், வானில் தத்தமிருப் பிடம்தேடிப் பறவை யெல்லாம் தம்மினத்தோ டழகாகப் பறக்கக் கண்டு கத்துகின்ற கன்றுகளை நினைத்துக் கொண்டே கறவையெல்லாம் விரைந்து வரும் காமரந்தி குத்துவிளக் கேற்றியபின் தனது காதல் கொழுனன்வரின் அவள் மகிழ்ச்சி கூறப் போமோ!

.52

52

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/52&oldid=1730721" இலிருந்து மீள்விக்கப்பட்டது