பக்கம்:எச்சரிக்கை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

42. சுதந்திர தினம் கொக்கரக் கோவென்று கூவுது கோழி கும்கும் கும் மென்று குமுறுது பேரி செக்கச் செவேலென்று சிவந்தது வானம் சீக்கிர மாக எழுந்திரு பாப்பா! சீக்கிர மாக எழுந்திரு பாப்பா சீமை விடுதலை நாளின்று பாப்பா!! காகா காவென்று கரையுது காகம் காமரு பூவினம் பூத்தத னேகம் பாகாரு மின்னிசை கேட்குது தேகம் பட்டென் றுதறி யெழுந்திரு பாப்பா! பட்டென் றுதறி யெழுந்திரு பாப்பா! பாரின் விடுதலை நாளின்று பாப்பா!! ஆலயந் தோறும் மணிகளின் நாதம் ஆறு குளங்களில் மந்திர கீதம் காலைப் பொழுது புலர்ந்தது போதும் கண்ணைத் துடைத்து விழித்தெழு பாப்பா! கண்ணைத் துடைத்து விழித்தெழு பாப்பா! காந்தி மகானைக் கைதொழு பாப்பா!! மேகப் படலங்கள் யாவையும் வாட்டி மெத்தெனும் தண்ணொளி யாங்கரம் நீட்டி வேகத் துடன் எழும் பரிதியுன் போட்டி விரைந்து நிமிர்ந்து விழித்தெழு பாப்பா! விரைந்து நிமிர்ந்து விழித்தெழு பாப்பா! வீரச் சுதந்திர நாளின்று பாப்பா!!

54

54

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/54&oldid=1730719" இலிருந்து மீள்விக்கப்பட்டது