பக்கம்:எச்சரிக்கை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.நல்ல நாடு நான்பி றந்ததென் னாடு-உலகில் நனியும் நல்ல நாடு தேன்பி றந்தசுவைத் தமிழால் -என்றும் சிறப்பு மிக்க நாடு. உறுதி யானவுட லெழிலும் - அன்பால் உருகி கின்ற வுளமும் இறுதி யானமனத் தெளிவோ- டாண்பெண் இணைந்து வாழும் நாடு. உரிய தெனுந்தமது தொழிலே -கலையாய் உவந்து பேணுகின்ற அரிய பெரிய செயல் வல்லோர்- பலரும் அமைந்து வாழும் நாடு. தமது வாழ்க்கைநிலை தாமே-உயர்த்தித் தகுதி செய்து கொண்டு - அமைதி யானநிலை தனிலே - முறையாய் அறம்வளர்க்கும் நாடு. இதய மென்ற நறுஞ் சுனையில் ஓயா தினிய நீர்சு ரந்து புதிய பொருள்பல வுண்டாக்கி - எங்கும் புகழ்ந்து போற்றும் நாடு. புனித மானநறு மலர்கள் -- முகர்வோர் புலன்க ளிக்கு மாறு மனதின் மாட்சிமையி னாலே-யார்க்கும் மகிழ்ச்சி யூட்டும் நாடு. து உலர்ந்து திர்ந்தசரு கே போல்- உயிர்போய் உடல்வி ழுந்த பின்னும் மலர்ந்த நெஞ்சுபடு மண்ணும் - மட்கி மணம்ப ரப்பு நாடு.

8

8

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சரிக்கை.pdf/8&oldid=1730678" இலிருந்து மீள்விக்கப்பட்டது