பக்கம்:எச்சில் இரவு.pdf/100

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90


அங்கே அநுபல்லவி பிறந்தது.

சரச மாடிய போது,

அங்கே சரணம் பிறந்தது.

விளிம்பு தேயாத வெண்ணிலவை

அவள் பார்த்தாள்.

மேடு கட்டிய இடத்தில் வேடு கட்டிய

அந்தப் பெண்ணிலவை

அவன் பார்த்தான்

சுகக் கதவைத் திறப்பதற்கு முன்

அவள் தன் முகக் கதவைத் திறந்தாள்.

முத்த மிடுவதற்காக,

அவளை முற்றத்திற்கு அழைத்தான்.

அனைத்து மகிழ்ந்திட வேண்டி,

"அன்பே ! அருகில் வா !

இந்த அறைக்கு வா !”

என்று அவளை அழைத்தான்.

"நீங்கள் எதைச் செய்தாலும்

எதுகை மோனே என்னும்

பொருத்தம் பார்த்தல்லவா செய்வீர்கள்"

என்று சொல்லிக் கொண்டே,

முதலில் அவள், முற்றத்திற்கு வந்தாள்.

அவன் அவளை முத்தமிட்டான்.

அவள் அதன் பிறகு, ஒர் அறைக்குள் சென்றாள்.

அவன் அவளை அனைத்து மகிழ்ந்தான்.

அந்த விட்டுப் பூனை,

கண்களை மூடிக் கொண்டிருந்தது.

இரவு நேரம்,

மறுநாள் ஒரத்திற்கு ஒடிக் கொண்டிருந்தது.


______

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/100&oldid=1314410" இலிருந்து மீள்விக்கப்பட்டது