பக்கம்:எச்சில் இரவு.pdf/11

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது




மரகதச் சோலையே
மஞ்சம்

அவள் ---

பல் முளைக்காமலும், நாவில் சொல் முளைக்காமலும் பிறந்தவள்.

முதற் பருவத்தில் அவள் ஒரு பேதை, மூன்றாம் பருவத்தில் அவள் ஒரு மங்கை, மாமன் மகன் அவளை மாலையிட்டபோது, அவளொரு மங்கல மடந்தை.

அவள் வதனவட்டம்-ஒரு நிலா நிலம்! அவள் வாயிதழ்கள், சேர்ந்து பிறந்த செம்பவளங்கள். அவள் அழகு நெற்றி, ஒர் அகத்திப்பூ அவள் அடிவயிறு ஒர் ஆலந்தளிர்.

மேலே கனிந்த கனிகள்; கீழே மலர்ந்த மலர்கள் நடுவில் கட்டுண்ட காய்கள், அதற்கும் கீழே, உப்பு நீரால் அடிக்கடி நனையும் ஒர் இலை, இவை அனைத்தும் நன்கமையப் பெற்ற ஒர் அதிசயக் கொடி போன்றவள் அந்தத் தையல் தாமரை.

அவள் ஆடும்போது மயில்; பாடும்போது குயில்; ஒடும்போது மான்; கூடும்போது ஒரு குளிர்நதி, அதுவும், மேற்கிலிருந்து கிழக்கு நோக்கி ஓடும் ஒரு மெல்லிய நதி.

2289–1

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/11&oldid=1244863" இலிருந்து மீள்விக்கப்பட்டது