பக்கம்:எச்சில் இரவு.pdf/12

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



2


அன்றாடம் அவள் திரட்டி வந்த செய்திகள், இனிக்கும் இலக்கியச் செய்திகள். அடிக்கடி அவள் திறந்து படித்த புத்தகம் திருக்குறள். அவள் பறித்துச் சூடிய பூ, கொடிப்பூ அவள் பாடிவந்த பண், பழம் பஞ்சுரம்.

ஆசையே அவளுக்குத் தோணி. அகத்துறையே அவளுக்குச் சுகத்துறை.

அவனோடு அவள், பலாப்பழத்தின் நெருப்பு. நிறச்சுளைகளைப் போன்று நெருங்கி இருக்கவும், வரகின் சின்னஞ்சிறு கதிர்களைப் போன்று சேர்ந்திருக்கவும் தெரிந்தவள்.

அவளுக்கென்று தனிப்பெருமைகள் பல உண்டெனினும் தற்பெருமை மட்டும் அவளிடம் கிடையாது.

ஒருநாள், அந்த ஒருநாளில் அரைநாள்; அந்த அரை நாளை, முறையாக வகுத்துக் கணக்கிடும் மூன்று பொழுதுகளுள் ஒன்றாகிய மாலைப்பொழுது.

பொன்மாலைப் பொழுதில், செங்கதிர் எங்கே இருக்க வேண்டுமோ அங்கே இருந்தது. பறவைகள் எவற்றை நோக்கித் திரும்ப வேண்டுமோ, அவற்றை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தன. தென் பொதிகையிலிருந்து தென்றல் எப்போது புறப்படவேண்டுமோ அப்போது புறப்பட்டு, எப்படி அசைய வேண்டுமோ அப்படி அசைந்து, எங்கெங்குப் போக வேண்டுமோ அங்கங்குப் போய்க்கொண்டிருந்தது.

அவனும் அவளும் அவ்வூரிலுள்ள ஒரு பூஞ்சோலை நோக்கிப் புறப்பட்டனர்.

அவன், அவளுக்குத் தலைவன். ஆதலால், அவன் முன்னே சென்றான். அவளோ அவன் பின்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/12&oldid=1244851" இலிருந்து மீள்விக்கப்பட்டது