பக்கம்:எச்சில் இரவு.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
4


அவள் நடையில், மெல்லினம் வளர்ந்தது.

அச் சோலையின் இயற்கை எழிலைக் கண்டு, அவன் அடிக்கடி உள்ளம் உவந்தான். அதனைக் கண்ட மங்கை அவனே நோக்கி ‘அத்தான்’ என்றழைத்தாள். “ஏன்?” என்றான் அவன்.

“அறிஞர் அரசஞ்சண்முகனார் பிறந்த ஊர் எது?” என்று அவள் அவனைக் கேட்டாள்.

அதற்கவன், “மதுரைக்குப் பக்கத்திலுள்ள சோழவந்தான் என்னும் சிற்றுார்தான் அவர் பிறந்த ஊர்” என்று சொன்னான்.

“ஒருகாலத்தில் சோழமன்னன் ஒருவன் அங்கு வந்ததனால் அவ்வூருக்குச் சோழவந்தான் என்று பெயர் வந்ததாகவும்; அவ்வூரிலுள்ள சோலைகளின் எழிலைக் கண்டு அச்சோழ மன்னன் உள்ளம் உவந்த காரணத்தால், அவ்வூருக்குச் சோழனுவந்தான் என்று பெயர் வந்ததாகவும், சோழனுவந்தான் என்பதே பின்னர் சோழவந்தான் ஆயிற்றென்றும் சொல்லுகின்றார்களே, இது சரிதானா” என்று கேட்டாள்.

“சரிதான்” என்றான் அவன்.

அவள் அவனை கோக்கி "சுகத்தை வெறுக்கும் துறவிகள்கூட சோலையை மட்டும் வெறுப்பதில்லை” என்றாள்.

அதற்கவன், “நீ கூறுவது உண்மைதான் என்றாலும், இரக்கத்தின் வடிவமாக விளங்கிய இராமலிங்க அடிகள் நெட்டை மரச் சோலையைவிட, வெட்ட வெளியைத்தான் பெரிதும் விரும்பினாராம்” என்று

கூறினான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/14&oldid=1244853" இலிருந்து மீள்விக்கப்பட்டது