பக்கம்:எச்சில் இரவு.pdf/17

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7


பல நற் செயல்களுக்கே பயன்படுத்தி வந்தாள். குறிப்பாக, சென்னையில் பாலரக்ஷணை·சங்கத்திற்கு ஐயாயிரம்ரூபாயும், அன்னதான சமாஜத்திற்கு ஆயிரம்ரூபாயும், பச்சையப்பன் கல்லூரிக்கு நாலாயிரம் ரூபாயும், சேலம் சிவன் கோவில் தேருக்கு நாலாயிரம் ரூபாயும், பக்தர்கள் தங்குவதற்காகச் சேலத்தில் ஒரு பெரிய வீட்டையும் வழங்குமாறு தன் உயிலில் அவள் எழுதிவைத்திருக்கிறாள்” என்று சொன்னான் அவன்.

"இவ்வளவு நன்மைகள் செய்த அவளை இந்த நாடு முற்றிலும் மறந்து விட்டதே” என்றாள், அவள்.

"ஆறாண்டுகட்கு முன் இருந்த பேரறிஞர்களையே மறந்து போய்விட்டநாடு, அறுபத்தேழு ஆண்டுகளுக்கு முன் இருந்த அவளையா இந்நாடு நினைவில் வைத்திருக்கப் போகிறது” என்றான் அவன்.

“சேலம் கோதாவரியை நம் நாடு மறந்துவிட்டாலும் நாம் மறந்துவிடவில்லை” என்றாள் அவள்.

“கனவுகளை நாம் மறந்து போகலாம். ஆனால் நம்முடைய கண்களை நாம் மறந்து விடமுடியாது?” என்றான் அவன்.

“நீங்கள் மிகவும் நன்றாகப் பேசுகிறீர்கள்!” என்றாள் அவள்.

“இதற்கெல்லாம் நீ தானே காரணம்” என்றான் அவன்.

அவள் சிரித்தாள். அந்தச் சிரிப்பில், வெண் முல்லைகள் வெளியே தலைகாட்டின.

“கொல்லையிலும் முல்லை; உன் கூந்தலிலும் முல்லை;

உன் கோவை இதழ்களிலும் முல்லை” என்றான் அவன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/17&oldid=1244857" இலிருந்து மீள்விக்கப்பட்டது