பக்கம்:எச்சில் இரவு.pdf/20

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
10


கூவிடும் பூஞ்சோலை’ என்று பாடியுள்ளார். ‘ரூபச்சித்திர மாமரக்குயிலே’ என்று மற்றொரு புலவரும் பாடியிருக்கிறார். குயில்கள் மாமரத்தில் தங்குவதால் நாம் அதனை மாங்குயில் என்றல்லவா அழைக்கிறோம். ஆனால் வடமொழியாளர்களோ, குயில் தங்குவதற்கு இடந்தரும் மாமரத்தைக் கோகில விருட்சம் என்று அழைக்கின்றனர்’ என்றான் அவன்.

அவள், அவனது தமிழறிவைப் பாராட்டினாள்.

அவன், அவளது தனியழகைப் பாராட்டினான்.

வழியில் இருவரும் ஒரு மரத்தடியில் நின்றனர். அவள் அவனை நோக்கி, "இது என்ன மரம், அசோகமரந்தானே? என்று கேட்டாள்.

“இது அசோக மரமல்ல, ஆச்சாமரம். தாய் வயிற்றிலிருந்து சோகமின்றிப் பிறந்த சக்கரவர்த்தி அசோகன், அசோகமரத்தின் நிழலில்தான் அடிக்கடி உலவுவானாம். அவன் வளர்த்து வந்த அசோக மரங்களே, ஒருநாள் அரண்மனைப் பெண்கள் வெட்டி வீழ்த்தி விட்டார்களாம். அதனை அறிந்த அசோகன், உடனே அவர்களை வெட்டி வீழ்த்தும்படி கட்டளையிட்டானாம்” என்று அவன் அவளிடம் கூறினான்.

அதனைக் கேட்ட அவள் “அவ்வளவு கொடியவனா அவன்! அப்படிப்பட்டவனை நம்நாடு நல்லவன் என்று பாராட்டுகிறதே!” என்றாள் அவள்.

“அவன் செய்த தீமைகளைவிட நாட்டுக்கு அவன் செய்த நன்மைகள் அதிகம். அதனால் அவனை உலகமே பாராட்டுகிறது” என்றான் அவன்.

"அப்படியா! அதிருக்கட்டும், அவன் புன்னை மரங்களையும் தென்னை மரங்களையும் வளர்க்கச் சொல்லாமல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/20&oldid=1244860" இலிருந்து மீள்விக்கப்பட்டது