பக்கம்:எச்சில் இரவு.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
12


இருப்பதால் தங்கள் சொற்பொழிவை இன்று நிறுத்திவைத்தால் நலமாக இருக்கும் என்றாராம். அதனைக் கேட்ட கவிராயர் “அப்படிப்பட்ட மகாவித்வானுக்கு முன்பாகத்தான் அவசியம் பிரசங்கிக்க வேண்டும்” என்று கூறி——அன்று கம்பராமாயணம் சுந்தர காண்டத்தில் பொழிலிருந்த படலத்தில்——அசோக விருட்சம் இவ்விதமாக உற்பத்தியாயிற்றென்றும், அது, நெருங்கிய பசுமையாகிய இலைகளை உடையதென்றும், காலை, மாலை முதலிய எந்த வேளையிலும் தன்னிழல் தன்னைக் காத்து நிற்குமென்றும், அந்நிழலின் கண் வந்தவர்களுடைய சோகத்தைத் தீர்ப்பதனால்——அதற்கு ‘அசோகம்’ என்று பெயர் வந்ததென்றும், பெண்கள் உதைத்தால் அது மலருமென்றும், அம்மலர் மன்மத பாணத்தில் ஒன்றென்றும், அது மன்மதனால் காமங்கொண்டவர்களுடைய கண்ணிற் பயன்படுத்தப்படுவதென்றும், அதுபோய் அவர்களுக்கு வெப்பத்தை விளைவிப்பதென்றும், அதன் நிறம் அக்கினி போல்வதென்றும், அதன் தளிர் காய்கனிகளின் குணம் இன்னதின்னதென்றும், அம்மரம் இக்காலத்தில் இல்லை என்றும், காணக்கிடைக்காத அவ்வசோகமென்று வேறொரு மரத்தை வழங்குகிறார்கள் என்றும், அசோக மரத்தின் கன்றுகளை இராவணன் ஒரு தீவிலிருந்து எடுப்பித்து வந்து, நாட்டி வனமாக வளர்ப்பித்தான் என்றும், அவ்வனத்திலேதான் சீதை சிறையிலிருந்தாள் என்றும் கூறினராம்.” இவ்விளக்கத்தைக் கேட்ட குழந்தை முதலியார் வியப்புற்று நானிதுவரையில் இப்படிப் பிரசங்கித்தவர்களைக் கண்டதும், கேட்டதும் இல்லை என்று வியந்து கூறினராம்." என்று சொல்லிக் கொண்டே நடந்தான். அவளும் நடந்தாள். நடந்து

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/22&oldid=1244862" இலிருந்து மீள்விக்கப்பட்டது