பக்கம்:எச்சில் இரவு.pdf/25

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.



15


உடனே அவன் அவளை நோக்கி, “சற்றுமுன் அங்கே அந்தக் குயில் பாடியது. இப்போது இங்கே இந்தக்குயில் பாடட்டுமே" என்றான்.

சிலப்பதிகாரத்தில், காடுகாண் காதையில் வரும் சில அடிகளை அவள் இனிய பண்கலந்து பாடினாள். அவன் அதனைக் கேட்டு மகிழ்ந்தான். ஒன்று இரண்டு மூன்று முறை அவளைப் புகழ்ந்தான்.

சிலப்பதிகாரத்தில் நூற்றுமூன்று பண்களைப் பற்றியசெய்திகள் காணப்படுவதாக அவள் அவனுக்கு நினைவூட்டினாள்.

நமக்குத் திருமணமாகி இன்றோடு நூற்றுமூன்று நாட்கள் ஆகின்றன என்னும் மங்கலச் செய்தியை அவன் அவளுக்கு நினைவூட்டினான்.

அச்செய்தியைக் கேட்டதும் அவள் உள்ளம் தைத்திங்கள் தடாகத்து நீர்போல் குளிர்ந்தது. மணந்த நாளன்று வீங்கிய அவளுடைய தோள்கள் மறுபடியும் வீங்கின

அவன் அவளுடைய தோள்களைத் தொட்டான். அப்போது அவள், நெல்லின் முனையளவு துாரம் ஒரு காலைத்தூக்கி நிலத்தில் வைத்தாள். அப்போது அவனுடைய ஆசையோ, வில்லின் முனையளவு தூரம் விரிந்து சென்றது.

பிறகு அவளுடைய மனக்குறி கண்டு அவன் நகக்குறி வைத்தான்.

தகுதியற்ற இடத்திலிருந்து மவுனமாக விலகிச்செல்லும் ஓர் அறிஞனைப் போல அவளது ஆடையும், நாணமும் அவளைவிட்டு விலகின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/25&oldid=1245103" இலிருந்து மீள்விக்கப்பட்டது