பக்கம்:எச்சில் இரவு.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
21


தணிப்பதற்காகவே அவள் தன் கண்களுக்கு மையிட்டுக் கொள்கிறாள். அதனால் அவனுடையகணவனுக்கும், அவளைச் சந்திக்கும் ஆண்களுக்கும் பரிகாரம் ஏற்படுகிறது. மை வைத்துக் கொள்ளாவிட்டால் அந்த வெப்பம், ஆண்களின் உடல் நலத்தை அதிகமாக பாதித்துவிடும். அதனால்தான் அவர்கள் மையிட்டுக் கொள்கின்றனர்” என்றாள்.

“நீ ஒரு மருத்துவரின் மகளல்லவா? அதனால்தான் இதைப் பற்றி நீ இவ்வளவு நன்றாகத் தெரிந்து வைத்திருக்கிறாய். ஆமாம், உன்தந்தையை எல்லோரும் ‘வயிற்றுவலி வைத்தியர்’ என்று அழைக்கின்றார்களே அது ஏன்? அவருக்கு அடிக்கடி வயிற்றுவலி வருவதுண்டோ?” என்று கேட்டான்.

அப்போது அவள் அவனை நோக்கி “வாதிடுவதில் மிகவும் வல்லவராக விளங்கிய அப்பைய தீட்சிதர் என்பவருக்குத்தான் அன்றாடம் நண்பகல் நேரத்தில் வயிற்றுவலி வருமாம். அவரைப் போல் என் தந்தைக்கு வயிற்றுவலியும் கிடையாது. வேறு வலிகளாலும் அவர் இதுவரை துன்புற்றதில்லை. பிறருக்கு வரும் வயிற்றுவலியை அவர் குணப்படுத்துவதில் வல்லவர். அதனால் தான் அவரை எல்லோரும் வயிற்றுவலி வைத்தியர் என்று அழைக்கின்றனர். என் தந்தையை மிகச் சாதாரணமானவர் என்று நினைத்து விடாதீர்கள். அவர் ஒரு மருத்துவமேதை. அவருடைய தந்தையும் அவருடைய பாட்டனும் புகழ்பெற்ற மருத்துவர்களாக விளங்கியவர்கள். ஜான் பஹ்டன் என்பவர், மன்னர் ஷாஜகான் மகளுக்கும், அஜீஸ்தீனே என்பவர், பஞ்சாப் மன்னன் ரஞ்சித் சிங்குக்கும், இங்கிலாந்து டாக்டர் எஸ்லி என்பவர், ராஜாராம் மோகன்ராய்க்கும், ஆலங்குடி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/31&oldid=1197557" இலிருந்து மீள்விக்கப்பட்டது