பக்கம்:எச்சில் இரவு.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
26

தாமரைப்பூவன்று. முதல் நாளன்று மலரும் தாமரைப்பூ, என்றான்.

முதல்நாள் மலர்கின்ற தாமரையாக இருந்தாலென்ன? எட்டாம்நாள் மலர்கின்ற தாமரையாக இருந்தாலென்ன? இரண்டும் ஒன்றுதானே என்று கேட்டாள்.

இரண்டும் ஒன்றுதான் என்றாலும், அதன் மலர்ச்சியிலும் வளர்ச்சியிலும் பல மாறுதல்கள் இருக்கின்றன. “தாமரைமலர், எட்டு நாட்கள் வரையிலும், காலையில் மலர்ந்து, மாலையில் குவியும் இயல்புடையது. அதன் முதல்நாள் மலர்ச்சியிலேதான் தேனிருக்கும். மறுநாள் அதில் தேனிராது. அதுமட்டுமல்ல, அப்பூவிலுள்ள புறவிதழ்கள் ஒவ்வொருநாளும், ஒவ்வொன்றாகக் கருகும். நீ அப்படிப்பட்ட தாமரையல்லவே!” என்றான் அவன்.

“நீங்கள் என்னைப் புகழ்ந்தது போதும். இந்த ஆண்களே எப்போதும் இப்படித்தான். பெண்களைக் கண்டுவிட்டால், அவர்களைத் தம் வாய் வலியெடுக்கும் வரையில் வர்ணித்துக் கொண்டே இருப்பார்கள்” என்றாள்.

அடிக்கடி தன் உதடுகளால் அவள் உதடுகளைத் துடைத்துவிடுபவன், அப்போது அவளுடைய காய்மேடுகளையும், கனிமேடுகளையும் தொட்டான். அவள் நோக்கி, “திபேத்திய நாடோடிகள் குதிரை ஏறுவதிலும், குறிபார்த்துச் சுடுவதிலும் வல்லவர்கள். நீங்களோ, குறிப்பறிந்து நடப்பதிலும், குறிபார்த்துத் தொடுவதிலும் வல்லவர் என்று சொல்லிக்கொண்டே நல்ல நல்ல மலர் போன்ற அவள் மெல்ல மெல்ல நடந்தாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/36&oldid=1197673" இலிருந்து மீள்விக்கப்பட்டது