பக்கம்:எச்சில் இரவு.pdf/41

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

31

ஒசை வெளிப்படாத பார்வைப் பேச்சும், அவர்கள். அன்றாடம் விட்டுவந்த பெருமூச்சும், நாளடைவில், உறவை உருவாக்கி, இரவை இனிக்க வைத்தன. காத்திருந்த குமரனும், கனிந்திருந்த குமரியும், குயில்கூவும் சோலையில் ஒர்நாள் இரவு, கூட்டல் குறியாயினர். பெற்றோர்கள் அவளைப் பெருந்தேவி என்று அழைத்துவந்தனர். தோழிப் பெண்களோ, அவளைத் தொட்டால் சுருங்கி என்று அழைத்து வந்தனர். அவளுடைய காதலனே அவளை அகவல் நாயகி என்று அழைத்து வந்தான். பகல் நேரத்தில், அவன் அவளைப் பார்த்துக்கொண்டே போவான். அன்றொரு நாள், பகலின் பங்காளியாகிய இரவு நேரம். முதலில் பிறையாக இருந்து, மூவைந்து நாட்களில் முறையாக வளர்ந்து, முற்றுப்பெற்ற முழுநிலா, அன்று முதலில் வந்தது. முக்காடு போடாத முழு நிலா வந்த பிறகு, ஆற்றங்கரைக்கு அவன் வந்தான். சிறிது கேரத்தில், அவளும் அங்கே வந்தாள். அவள் அங்கு வந்தவுடன், அவளைப் பார்த்து 'தங்கச்சிவந்தியா?' என்று அவன் கேட்டான். உடனே அவள் "நான் உங்களுக்குத் தங்கச்சியா?" என்று கேட்டாள். 'உன் அண்ணனுக்கு நீ தங்கச்சி என்பதும், இந்தக் கண்ணனுக்கு நீ ஒரு தங்கச்சிலை என்பதும் எனக்குத் தெரியாதா? இப்போது நீ உன் தலையில் சூடியிருக்கும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:எச்சில்_இரவு.pdf/41&oldid=1405347" இலிருந்து மீள்விக்கப்பட்டது